2017-02-11

மழைக் காலம்

குடை பிடித்துச் செருப்புமிட்டுப்
புத்தகமுங் கொண்டு
குடுகுடென நடந்து வரும்
குழந்தைகளே கேளீர்

மழைக் காலம் வழி வழுக்கும்
மிகக் கவனம் மக்காள்
வழியருகே வெள்ளமுண்டு
விலகி வரல் வேண்டும்

வெள்ளத்தில் கல்லெறிந்து
விளையாடல் வேண்டாம்
வீண் சண்டையால் வழுக்கி
விழுந்தெழும்ப வேண்டாம்

கண்மணிகாள் நீர்ச்சிரங்கு
காலில் வரும் கவனம்
கண்ணூறக்கம் இன்றியிராக்
கத்த வரும் கவனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக