2017-02-12

அழகு மயில்

அழகு மயில் ஆடுது
ஆனந்த மாய் ஆடுது
தோகை மயில் ஆடுது
தோகை விரித்து ஆடுது

வண்ண மயில் ஆடுது
வானம் பார்த்து ஆடுது
வந்து நீங்கள் பாருங்கள்
வாழ்த்துக் கூறி ஆடுங்கள்.

-   கவிஞர். த. துரைசிங்கம்

வாகனங்கள்


சல்சல் வண்டி மாட்டுவண்டி
சவாரி போகும் மாட்டுவாண்டி
பூம்பூம் பூம்பூம் மோட்டார்க்கார்
போகுது தெருவில் மோட்டார்க்கார்

றிங்றிங் றிங்றிங் சயிக்கிள் வண்டி
இரண்டு சில்லு சயிக்கிள் வண்டி
சிக்குப்புக்கு சிக்குப்புக்கு புகைவண்டி
சீக்கிரம் செல்லும் புகைவண்டி

பயணம் நாமும் சென்றிடவே
பற்பல வண்டிகள் இன்றுண்டு
பற்பல இடங்களைப் பார்த்திடுவோம்
பத்திர மாகச் சென்றிடுவோம்.

   -கவிஞர். த. துரைசிங்கம்

அச்சமில்லை அச்சமில்லை


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதித்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே.
இச்சகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

கச்சணிந்த கொங்க மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சவாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

கொன்றை வேந்தன்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
ஏவா மக்கள் மூவா மருந்து.
ஐயம் புகினும் செய்வன செய்.
ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.

ஆத்திசூடி

அறம் செய விரும்பு.
ஆறுவது சினம்.
இயல்வது கரவேல்.
ஈவது விலக்கேல்.
உடையது விளம்பேல்.
ஊக்கமது கைவிடேல்.
எண் எழுத்து இகழேல்.
ஏற்பது இகழ்ச்சி.
ஐயம் இட்டு உண்.
ஒப்புரவு ஒழுகு.
ஓதுவது ஒழியேல்.
ஔவியம் பேசேல்.
அஃகம் சுருக்கேல்

ஔவைக் கிழவி

ஔவைக்கிழவி நம் கிழவி
அமுதின் இனிய சொற்கிழவி
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் தமிழ்க்கிழவி

கூழுக்காகக் கவி பாடும்
கூனற் கிழவி அவர் உரையை
வாழும் வாழ்வில் ஒரு நாளும்
மறவோம் மறவோம் மறவோமே

வண்ணத்துப் பூச்சி

வண்ணத்துப் பூச்சி வண்ணத்துப்பூச்சி
பறக்குது பார் பறக்குது பார்
அழகான செட்டை அழகான செட்டை
அடிக்குது பார் அடிக்குது பார்

சிவப்பு மஞ்சள் நீலம் பச்சை
பொட்டுக்கள் பார் பொட்டுக்கள் பார்
தொட்டது முடனே தொட்டது முடனே
பட்டது பார் பட்டது பார்

பூக்களின் மேலே பூக்களின் மேலே
பறந்து போய் பறந்து போய்
தேனதை உண்டு தேனதை உண்டு
களிக்குது பார் களிக்குது பார்

கன்றுக்குட்டி

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.
நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி
முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு – மடி
முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி

நம்பிக்கை காகம்

காகம் ஒன்று காட்டிலே
தாகத்தாலே தவித்ததாம்
அங்குமிங்கும் தேடியே
வீடு நோக்கிச் சென்றதாம்
அங்கு சிறிய ஜாடியில்
கொஞ்சம் தண்ணீர் இருந்ததாம்
எட்டி எட்டி பார்த்ததாம்
எட்டாமல் போனதாம்
சிறிய சிறிய கற்களை
பொறுக்கி கொண்டு போட்டதாம்
தண்ணீர் மேலே வந்ததாம்
தாகம் தீர குடித்ததாம்
நம்பிக்கையுடைய காக்கா தான்
சந்தோஷமாய் பறந்ததாம்

சாய்ந்தாடம்மா

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக் குயிலே சாய்ந்தாடு
சோலைக் கிளியே சாய்ந்தாடு
சுந்தர மயிலே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோவில் புறாவே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பகக் கொடியே சாய்ந்தாடு
தேனே மணியே சாய்ந்தாடு
தென்னவன் முத்தே சாய்ந்தாடு

2017-02-11

கை வீசம்மா கை வீசு

கை வீசம்மா கை வீசு…
கடைக்குப் போகலாம் கை வீசு…
மிட்டாய் வாங்கலாம் கை வீசு…
மெதுவாய் திங்கலாம் கை வீசு…
சொக்காய் வாங்கலாம் கை வீசு…
சொகுசாய் போடலாம் கை வீசு…
கோயிலுக்குப் போகலாம் கை வீசு…
கும்பிட்டு வரலாம் கை வீசு

வாத்து

குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து!

பச்சைக் கிளியே வா! வா!

பச்சைக் கிளியே வா வா!
பாலும் சோறும் உண்ண வா!
கொச்சி மஞ்சள் பூச வா!
கொஞ்சி விளையாட வா!

பைய பைய பறந்து வா!
பாடி பாடிக் களித்து வா!
கையில் வந்து இருக்க வா!
கனியருந்த ஓடி வா!

இனிய தமிழ்ப்பொங்கல்

தைத்திருநாள் இல்லமெல்லாம்
தளிர்த்திடும் தைப்பொங்கல்
இத்தனை நாள் காத்திருந்தோம்
இனிய தமிழ்ப்பொங்கல்

கூவி அழைத்திடும் சேவல்
குதித்தெழுவோம் குளிப்போம்
பூவெடுப்போம் புதிதணிவோம்
பொங்கலன்று நாங்கள்

கோலமிட்டு விளக்கேற்றிக்
கும்பிடுவாள் அம்மா
பாலெடுத்துப் பொங்கலுக்குப்
பானை வைப்பார் அப்பா

விரும்பிய மா வாழை பலா
விதவிதமாய்க் கனிகள்
கரும்பிளனீர் படைத்து மனம்
களித்திடுவோம் நாங்கள்

வெண்ணிறப்பால் பொங்கி வர
வெடி சுடுவோம் நாங்கள்
இன்னமுதப் பொங்கலுண்ண
இணைந்து நிற்போம் நாங்கள்

அம்மா

பாலும் சோறும் உண்ணத் தந்து
படிக்கச் சொல்லும் அம்மா
காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா

புழுதி போக்கி நீருமாட்டி
பொட்டும் வைக்கும் அம்மா
அழுதிடாமல் பள்ளிக்கூடம்
அழைத்துச் செல்லும் அம்மா

பள்ளிக்கூடம் விட்ட நேரம்
பாதி வழிக்கு வந்து
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித்
தோளிற் போடும் அம்மா

மழைக் காலம்

குடை பிடித்துச் செருப்புமிட்டுப்
புத்தகமுங் கொண்டு
குடுகுடென நடந்து வரும்
குழந்தைகளே கேளீர்

மழைக் காலம் வழி வழுக்கும்
மிகக் கவனம் மக்காள்
வழியருகே வெள்ளமுண்டு
விலகி வரல் வேண்டும்

வெள்ளத்தில் கல்லெறிந்து
விளையாடல் வேண்டாம்
வீண் சண்டையால் வழுக்கி
விழுந்தெழும்ப வேண்டாம்

கண்மணிகாள் நீர்ச்சிரங்கு
காலில் வரும் கவனம்
கண்ணூறக்கம் இன்றியிராக்
கத்த வரும் கவனம்

2017-02-03

நிறங்கள்

சிவப்பு



பச்சை



நீலம்



கறுப்பு



மஞ்சள்



ஊதா



செம்மஞ்சள்






ஓடி விளையாடு பாப்பா


ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா.



காலை எழுந்ததும் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா.



சின்னஞ்சிறு குருவி போலே
நீ திரிந்து பறந்து வா பாப்பா
வண்ண பறவைகளைக்கண்டு நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.



ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா



பாடல் வரிகள்: மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

2017-01-29

அம்மா இங்கே வா! வா!



அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு

உன்னைப் போன்ற நல்லார்,
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை

ஐயமின்றி சொல்லுவேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.

அணிலே அணிலே ஓடி வா





அணிலே அணிலே ஓடிவா

அழகு அணிலே ஓடிவா





கொய்யாமரம் ஏறிவா

குண்டுப்பழம் கொண்டுவா







பாதி பழம் உன்னிடம்,
பாதி பழம் என்னிடம்…




கூடிக்கூடி இருவரும்

கொறித்துக் கொறித்துத் தின்னலாம்



2017-01-07

அகர வரிசை பாடல்

அ இற்கு அம்மா
ஆ இற்கு ஆடு
இ இற்கு இலை
ஈ இற்கு ஈச்சை 

உ இற்கு உரல்
ஊ இற்கு ஊஞ்சல் 
எ இற்கு எலி 
ஏ இற்கு ஏணி 

ஐ இற்கு ஐவர் 
ஒ இற்கு ஒட்டகம் 
ஓ இற்கு ஓடம் 
ஒள இற்கு ஒளவை 

ஆக மொத்தம் பன்னிரண்டு, இவை தான் தமிழின் உயிர் எழுத்துக்கள் 

க, ச, ட, த, ப, ற - வல்லினம் 
ய, ர, ல, வ, ழ, ள - இடையினம் 
ங, ஞ, ண, ந, ம, ன - மெல்லினம் 
உள்ளே வைத்தால் மெய்யினம்  

உயிர் எழுத்த்துகள் பன்னிரண்டு, மெய் எழுத்துக்கள் பதினெட்டு, 
உயிரும் மெய்யும் பெருக்கி பாரு இருநூற்றிப்பதினாறு 
ஆக மொத்தம் கூட்டி பாரு இருநூற்றிநாற்பத்தாறு 
ஆயுத எழுத்தை (ஃ) கூடு இருநூற்றிநாற்பத்தேழு  




உயிர் எழுத்த்துகள்
அ 
ஆ 
இ 
ஈ 
உ 
ஊ 
எ 
ஏ 
ஐ 
ஒ 
ஓ 
ஒள 


மெய் எழுத்துக்கள்  
க் 
ங் 
ச் 
ஞ்
ட் 
ண் 
த் 
ந் 
ப் 
ம் 
ய் 
ர் 
ல் 
வ் 
ழ் 
ள் 
ற்
ன்