2015-05-28

கோளறு பதிகம்

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு தினெட்டொ டாறும்
உடனாய நாள்க வைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

உருவளர் பவளமேனி ஒளிநீ ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே

மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே

நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே

வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே

செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையானபித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே

வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ மணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே


தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே

2015-05-19

கொண்டுவா



காக்கா காக்கா

கண்ணுக்கு மை கொண்டுவா





குருவி குருவி

கொண்டைக்குப் பூ கொண்டுவா






கிளியே கிளியே

குழந்தைக்குப் பழம் கொண்டுவா






பசுவே பசுவே

பாப்பாவுக்கு பால் கொண்டுவா.




தோ! தோ! நாய்க்குட்டி!!




தோ தோ நாய்க்குட்டி

துள்ளி வா நாய்க்குட்டி

வெள்ளை நிற நாய்க்குட்டி

வீரமான நாய்க்குட்டி




வாலை வாலை ஆட்டும்

பாலைப் பாலைக் குடிக்கும்

நன்றியுள்ள நாய்க்குட்டி

நான் வளர்க்கும் நாய்க்குட்டி





எலியைப் பிடிக்க ஓடும்

புலியைப் போல பாயும்

திருடன் வந்தால் குலைக்கும்

லொள்! லொள்! லொள்!



படங்கள் மூலம்:
  1. http://www.animalplanet.com/pets/dogs/
  2. http://il3.picdn.net/shutterstock/videos/3590408/thumb/3.jpg
  3. http://www.thedogproject.com.au/barking.html

வணக்கம்


அம்மா அம்மா வணக்கம்

உங்கள் அன்பு வேண்டும் எனக்கும்



அப்பா அப்பா வணக்கம்

உங்கள் ஆசி வேண்டும் எனக்கும்



குருவே குருவே வணக்கம்

அறிவு பெருகிடச் செய்திடும் எனக்கும்



இறைவா இறைவா வணக்கம்

எம்மை இனிதே காத்திடும் என்றும்.

நிலா நிலா ஓடிவா


நிலா நிலா ஓடிவா

நில்லாமல் ஓடிவா







மலைமீது ஏறி வா

மல்லிகைப்பூ கொண்டுவா.




வட்ட வட்ட நிலவே

வண்ண முகில்ப் பூவே

பட்டம் போல பறந்து வா

பம்பரம் போல் சுற்றிவா.




http://abc7ny.com/weather/what-if-the-moon-were-bigger/1357297/
http://claycord.com/2013/09/19/picture-the-harvest-moon-above-claycord/
http://www.dnaindia.com/scitech/report-mini-moon-moon-will-be-the-smallest-tomorrow-next-will-happen-only-in-2030-2204614

பட்டம் விடுவோம்

பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம்
பாலா ஓடி வா!
பாடி பாடி பட்டம் விடுவோம்
பாலா ஓடி வா!

ஆராரோ அரிரரோ

ஆராரோ அரிரரோ
அரிரரோ அராரோ

அரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு

கண்ணே யடிச்சரார்
கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்

மாமன் அடித்தானோ
மல்லி பூ சென்டாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொம்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே

ஆராரோ அரிரரோ
அரிரரோ அராரோ

அரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு!!

அகரவரிசைப் பாட்டு

அம்மா அப்பா ஆனவரே!
ஆடை அணிகள் அளிப்பவரே!
இனிய உணவும் தருவீரே!
ஈசன் பாதம் தொழுவோமே.
உண்போம் உடுப்போம் உவர்ந்திடுவோம்.
ஊஞ்சல் ஆடிப் பாடிடுவோம்.
எண்ணும் எழுத்தும் படித்திடுவோம்.
ஏவாமற் பணி செய்திடுவோம்.
ஐந்தும் இரண்டும் கற்றிடுவோம்.
அன்பாய்க் கூடி நடித்திடுவோம்.
ஒற்றுமையாக வாழ்ந்திடுவோம்.
ஓடிப்பாடி நடித்திடுவோம்.
ஒளவை பாடல் படித்திடுவோம்.
அம்மை அப்பரை வணங்கிடுவோம்.
அம்மா! அப்பா!

2015-05-09

சகலகலாவல்லி மாலை

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.                (1)

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.                         (2)

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.                           (3)

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.                       (4)

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே.                      (5)

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே.                    (6)

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.                    (7)

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.                     (8)

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே.                             (9)

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.                        (10)

பரீட்சார்த்த பதிவு

இந்த பதிவானது பரீட்சார்த்த பதிவு ஆகும். இந்த பதிவை புறக்கணிக்கவும்.